சீனாவின் ஷங்காயை தாக்கிய சூறாவளி ; 400,000  பேர் வெளியேற்றம்

Published By: Digital Desk 3

16 Sep, 2024 | 01:48 PM
image

1949 ஆம் ஆண்டுக்கு பின்னர் சீனாவின் ஷங்காய் நகரத்தை திங்கட்கிழமை (16) அதிகாலை சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து பாரிய காற்றும் வீசியதோடு, பலத்த மழையுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்து 400,000 க்கும்  அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்தோடு,  விமானங்கள், படகுகள் மற்றும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 

சீனாவில் மூன்று நாள் இலையுதிர்கால கொண்டாட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஷாங்காய்க்கு தென்மேற்கே 170 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதால் ஞாயிற்றுக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை 180 க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

60,000 க்கும் மேற்பட்ட அவசர உதவியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஷாங்காயில் உதவி வழங்க தயாராக உள்ளதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், திங்கட்கிழமை 414,000 க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புடாங் வணிக மாவட்டத்தில் அதன் மையத்திற்கு அருகில் பெபின்கா சூறாவளியினால்  151 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.

இந்த சூறாவளி அருகில் உள்ள ஜெஜியாங், ஜியாங்சு மற்றும் அன்ஹுய் மாகாணங்களையும் பாதிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.

பொதுவாக  சீனாவின் தெற்பே மண்சரிவை தூண்டும் சக்தி வாய்ந்த சூறாவளிகளால் 25 மில்லியன் மக்களைக் கொண்ட ஷங்காய் அரிதாகவே தாக்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் சீனாவின் தெற்கு ஹைனான் தீவை தாக்கிய யாகி சூறாவளி தென்கிழக்கு ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்தியது. மியன்மாரில் குறைந்தது 74 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர்.

ஹைனானில் நான்கு பேர் உயிரிழந்துள்ளன. தாய்லாந்தில் 10 பேரும், பிலிப்பைன்ஸில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு வியட்நாமில் சூறாவளியால் ஏற்பட்ட ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 230 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காணாமல் போயுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருக்கு 1...

2024-10-03 15:35:20
news-image

லெபனானில் இலங்கையர் எவரும் இதுவரை மோசமான...

2024-10-03 15:01:24
news-image

வியட்நாம் மிருகக்காட்சி சாலையில் பறவை காய்ச்சல்...

2024-10-03 14:22:09
news-image

ஜப்பான் விமான நிலையத்தில் புதைக்கப்பட்ட குண்டு...

2024-10-03 09:39:09
news-image

பெய்ரூட்டின் மத்திய பகுதியில் உள்ள மருத்துவநிலையம்...

2024-10-03 06:01:40
news-image

லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர்...

2024-10-02 20:33:33
news-image

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இஸ்ரேலிற்குள்...

2024-10-02 17:11:01
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன்...

2024-10-02 10:41:05
news-image

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் -...

2024-10-02 08:09:28
news-image

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் -...

2024-10-02 06:40:53
news-image

இஸ்ரேலிய தலைநகரில் துப்பாக்கி தாக்குதல் -...

2024-10-02 06:17:03
news-image

இஸ்ரேல் மீது ஈரான் தொடர் ஏவுகணை...

2024-10-02 05:54:56