ஜனாஸாக்களை எரிக்க முன்னின்றவர்கள் இன்று வாக்கிற்காக முஸ்லிம்களிடம் செல்கின்றனர் - சஜித்

16 Sep, 2024 | 02:12 PM
image

அநுரகுமார திசாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் தனக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது. நல்லடக்கம் செய்வதா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது தலைவர்கள் என்று கூறிக் கொள்கின்றவர்கள் அந்தப் பிரச்சினையை வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்று ஆராய்ந்து பார்க்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.   

இவர்கள் அன்றைய காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்காக முன்நிற்பதற்கு அச்சமடைந்தார்கள். அன்று எவ்வாறு இருந்தவர்கள் இன்று முஸ்லிம்களுடைய வாக்குகளை எதிர்பார்த்து முஸ்லிம்களிடத்தில் செல்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

காத்தான்குடியில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட  2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 60 ஆவது மக்கள் வெற்றி பேரணியில்  கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் தெரிவிக்கையில்,    

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் ஜனாஸாக்களை எரிப்பதா நல்லடக்கம் செய்வதா என்கின்ற பிரச்சினையின் போது உலக சுகாதார ஸ்தாபனம் இது தவறான விடயம் என குறிப்பிட்டது. ஆனால் முஸ்லிம் சமூகத்தை பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் கோட்டாபய அரசாங்கம் செயற்பட்டது. அன்று முஸ்லிம் சமூகத்துக்காக ஐக்கிய மக்கள் சக்தியே முன்னின்று செயற்பட்டது.  

அன்று முஸ்லிம் சமூகத்தை பழி வாங்குவதற்காகவே அவர்கள் அவ்வாறு செயற்பட்டார்கள். இந்த தவறான செயற்பாடுகளுக்கு எதிராக சஜித் பிரேமதாசவாகிய நானும் ஐக்கிய மக்கள் கூட்டணியுமே வீதிக்கிறங்கியது.  

இன, மத, குல பேதங்களின்றி அனைவரையும் சம அளவில் மதிக்கின்றவர்களே நாட்டின் தலைவர்களாக வேண்டும். அவ்வாறான தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வது மக்களின் பொறுப்பாகும். 

பலஸ்தீன மோதலின் போது அதற்காக ரணசிங்க பிரேமதாச முன்நின்றதோடு, இன்று தானும் பலஸ்தீன மக்களின் உரிமைக்காக முன்நிற்கின்றேன். ஹிட்லரின் நாசிசப் படை ஜெர்மனிக்கு செய்ததையே இன்று பலஸ்தீனத்திலும் செய்கின்றார்கள்.  

அவ்வாறான பெரும் பாதிப்புக்கு உள்ளான இஸ்ரேல் இன்று பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து மேற்கொள்கின்ற பாரிய அரச தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் இதனை தெரிவிப்பதற்கு அச்சமடைந்தாலும், இதனை நாம் வெளிப்படையாக தெரிவிக்கின்றோம். இந்த இரண்டு அரசாங்கங்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்.  

அரசாங்கத்தின் காணிகளை பயன்படுத்தி காணி இல்லாதவர்களுக்கு காணிகளையும், வீடில்லாதவர்களுக்கு வீடுகளையும் பெற்றுக் கொடுப்போம். தான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுத்தது போன்று மீண்டும் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பேன்.    

அத்தோடு நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், அனைத்து வைத்தியசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாகவும் வைத்தியசாலைகளாகவும் மாற்றுவோம். அத்தோடு ஆங்கில மொழிக் கல்வியையும் வழங்குவோம் என தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர்களுக்காகவும் தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.   

இன மத குல வகுப்பு கட்சி பேதங்கள் இன்றி மனிதநேயத்தை முதன்மைப்படுத்தி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலமும், இணக்கப்பாட்டோடும், ஒற்றுமையாகவும் தீர்வினை காண்கின்ற இந்த பயணத்தில் இணைந்து கொள்வோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41