புதிய வகை கார்கள் நச்சு வாயுக்களை முழுமையாக வெளியேற்றத் தவறி வருகின்றமை புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
காரொன்றுக்குள் இருக்கும் ஒருவர் ஒருதடவை சுவாசிக்கும் போது 10 மில்லியன் நச்சுத் துணிக்கைகளை சுவாசிப்பதாக பிரித்தானிய சுரே பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஆய்வு தெரிவிக்கிறது.
குறைந்த காற்றோட்ட வசதியுடைய காரில் பயணிக்கும் சாரதியும் பயணிகளும் வீதி நடை பாதையில் நடக்கும் போது சுவாசிக்க நேரிடுவதை விட 10 மடங்கு அதிகமான நச்சுத் துணிக்கைகளை சுவாசிப்பதாக நச்சுக்கள் தொடர்பான பகுப்பாய்வாளரான நிக் மோல்டன் தெரிவித்தார்.
கார்களின் இயந்திரங்களால் வெளிப்படும் நச்சுப் புகை சரியாக வெளியேற்றப்படாது காருக்குள் தேங்கியிருப்பதே மேற்படி நச்சு துணிக்கைள் தேங்குவதற்கு காரணமாவதாக கூறப்படுகிறது.
நகர, கிராம வீதிகளில் 4 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரத்தைக் கழித்த கார்களில் ஒரு கன சதுர சென்ரிமீற்றர் பகுதியிலுள்ள நச்சுத் துணிக்கைகளின் அளவு இந்த ஆய்வுக்காக அளவிடப்பட்டது.
உங்கள் கார் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்ட வேளை அந்தக் காரின் ஜன்னல்கள் மூடப்பட்டிருக்குமானால் காரு
க்குள்ளான நச்சுத் துணிக்கைகளின் செறிவு பல மடங்கு அதிகமாக இருக்கும் என இந்த ஆய்வில் பங்கேற்ற சுரே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறி யியலாளர் பேராசிரியர் பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
குறைந்த விலையுள்ள காரொன்றில் ஒரு கன சென்ரிமீற்றரில் காணப்படும் நச்சுத் துணிக்கைகளின் அளவு ஏனையகார்க ளுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாக உள்ளமை கண்டறிய ப்பட் டுள்ளது. வளிமண்டல நச்சு காரணமாக வரு டாந்தம் 40,000 பேர் முன்கூட்டியே மரணத்தைத் தழுவுவதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM