2017 ஆண்டின் ­நான்கு மாதங்­களில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் டெங்கு காய்ச்­ச­லினால் 8,332 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

சுகா­தார அமைச்சின் தொற்று நோய் விஞ்­ஞானப் பிரிவின் டெங்கு காய்ச்சல் குறித்த  கடந்த வாரத்­துக்­கான தர­வு­களின் பிர­காரம், வடக்கின் யாழ். மாவட்­டத்தில் 2,048 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 346 பேரும், வவு­னியா மாவட்­டத்தில் 324 பேரும் மற்றும் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் முறையே 180, 87 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை பதி­வா­கி­யுள்­ளது. இதற்­க­மைய வட மாகா­ணத்தில் டெங்கு காய்ச்­ச­லினால் இது­வரை 2,985 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வாறு கிழக்கு மாகா­ணத்தில் இது­வ­ரை­யான காலப்­ப­கு­தியில் 5,347 பேர் டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை பதி­வா­கி­யுள்­ளது. 

இதில், திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே அதி­க­ள­வி­லானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். கிண்­ணியா, மூதூர் உட்­பட திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில்  3,476 பேரும், மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1,696 பேரும், அம்­பாறை மாவட்­டத்தில் 175 பேரும் டெங்­கினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 

இதே­வேளை, இவ் ­வ­ரு­டத்தின் இந்த­நான்கு மாதங்­களில் நாட­ளா­விய ரீதியில் 34,059 பேர் டெங்கு நுளம்­பினால் பாதிக்­கப்­பட்டும் அவர்­களில் 61 பேர் உயி­ரி­ழந்­து­முள்­ளனர். டெங்கு நுளம்­பினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் இவ்­வெண்­ணிக்­கையில் அதி­க­ள­வி­லானோர் மேல் மாகா­ணத்தின் கொழும்பு மாவட்­டத்தில் காணப்­ப­டு­கின்­றனர். 

கொழும்பு மாவட்­டத்தில் 7,540 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் 1,848பேர் கொழும்பு மாநகர எல்லை பிரதேசங்களுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.