நான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தேன். கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்த உடனே அவற்றை நிறுத்தியதோடு, ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியும் கோட்டாபயவின் அடித்தளத்தில் சென்று அந்த வீடமைப்புத் திட்டங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
தான் ஜனாதிபதியானவுடன் அந்த வீடமைப்புத் திட்டங்களை மீளவும் ஆரம்பித்து கம் உதாவ திட்டத்தை செயற்படுத்துவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 59 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த காணிகள் தற்பொழுது காடாகியிருக்கின்றது. அந்தக் காணிகளை மீளப் பெற்றுக்கொடுப்பதோடு, யானை மனித மோதலுக்கும் நடவடிக்கை எடுப்போம்.
அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக மாற்றுவதோடு, 5000 ரூபாவுக்கு 50 கிலோ கிராமுள்ள ஒரு மூடை உரத்தை வழங்குவோம்.
தொழில் இல்லாத இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் ஆரம்பிப்போம்.
அத்தோடு யுவதிகளை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தி திட்டத்திற்கும் அடித்தளமிடுவோம். இன, மத, குல பேதங்களின்றி முழு நாட்டையும் அபிவிருத்தி அடையச் செய்யும் செயற்பாடுகளையும் முன்னெடுப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM