ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயகவும் நாடு முழுவதும் சென்று கூட்டம் போட்டாலும், ஜனாஸா நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது அவற்றிலிருந்து விலகியிருந்தார்கள். அவர்கள் அன்று முஸ்லிம் சமூகத்துக்காக முன்னிற்கவில்லை.
அன்று கோட்டாபய ராஜபக்ச கடைபிடித்த மோசமான இனவாத கொள்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் கூட்டணியுமே அரசியல் இலாபங்களை விடுத்து வீதிக்கிறங்கியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கல்முனையில் நேற்று சனிக்கிழமை (15) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 54 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா மற்றும் வங்குரோத்துதன்மை ஆகிய இந்த மூன்று அனர்த்தங்களினாலும் நாட்டு மக்கள் இன்று அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் வறியவர்களாக மாறி இருக்கின்றார்கள். ஏழ்மை அடைந்துள்ளனர்.
இந்த வறுமையை போக்குவதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இது தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குகின்ற வேலைத்திட்டமல்ல.
மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுப்பதற்காக 24 மாதங்களுக்கு ஐந்து வேலைத்திட்டங்களின் ஊடாக மாதாந்த 20 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவோம்.
விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்காக 5000 ரூபாவுக்கு உரமூடை ஒன்றை வழங்குவோம். மீனவ சமூகத்திற்கு நிவாரண அடிப்படையில் எரிபொருளை வழங்குவோம்.
அத்தோடு மீனவர்களுக்கு தேவையான நங்கூரமிடக்கூடிய நிலப்பிரதேசத்தையும் அமைத்துக் கொடுப்பதோடு, சகல வசதிகளோடும் விவசாயத்தில் ஈடுபடக்கூடிய நிலையையும் ஏற்படுத்துவோம்.
அனைத்து பாடசாலைகளுக்கும் சகல வசதிகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த கல்வியை பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM