முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய மக்கள் சக்தி முன்னின்று செயற்படும் - சஜித் பிரேமதாச

15 Sep, 2024 | 05:17 PM
image

அரசின் சுகாதாரக் கொள்கையின் ஊடாகவே சுகாதாரத் துறையின் நலன்புரி திட்டங்கள் இடம்பெறுகின்றன. இதே முறை ஐக்கிய இராஜ்யத்திலும் இடம்பெறுகின்றது. நலன்புரி செயற்பாடானது அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றாகும். இது நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளுக்குள்ளும் செயற்படுகிறது.  

எமது நாட்டில் நோய்களுக்கான சிகிச்சை அளிப்பு பிரிவை அவதானிக்கின்றபோது முதலாம் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, சிகிச்சை பிரிவுகள் காணப்படுகின்றன. நோய் தடுப்பு பிரிவில் குடும்ப சுகாதார சேவை, பொது சுகாதார சேவை என இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு பிரிவுகளையும் பலப்படுத்துகின்ற இந்த பயணத்தில் அனைத்து தரத்திலும் சிறந்த சேவையை வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

கொழும்பு பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை (14) நடைபெற்ற  ஐக்கிய சுகாதார மாநாடு “செழிப்பான தேசத்திற்கு தரமான சுகாதாரம்” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

சுகாதாரத் துறையில் காணப்படுகின்ற அனைத்து தரத்திலான சேவைகளிலும் ஈடுபட்டுள்ள மக்களின் அபிமானம் மற்றும் ஆத்ம திருப்தியை கொண்ட சேவைக்கான வசதிகளோடு திருப்திகரமான அரச சேவையை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள முடியுமான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்போம்.  

ஒட்டுமொத்த அரச ஊழியர்களின் சம்பளத்தை 24 வீதத்தால் அதிகரித்து, அடிப்படைச் சம்பளத்தை 57500 ரூபா வரை அதிகரிப்போம். அத்தோடு வரிச்சூத்திரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிபுணர்களுக்காக 6- 36 வீதம் வரை காணப்படுகின்ற வரி சூத்திரத்தை  1 - 24 வீதம் வரை குறைப்போம்.   

வங்குரோத்தடைந்த நாட்டில் இந்த வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக இதனை முறையாக செயல்படுத்த முடியும். கொடுப்பனவுகள், உத்தியோகபூர்வ இல்லங்கள், விடுதி வசதிகள் போன்றவற்றில் சிக்கல்கள் காணப்படுகின்றன.  

சில சேவைகளுக்கான உறுதித் தன்மை கிடைக்கப்பெறவில்லை. முழு சுகாதாரப் பிரிவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றது. இது தொடர்பில் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்பி உள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக இவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்போம்.  

எமது நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு வழமை போன்ற கட்டமைப்புக்குள், வரையறுக்கப்பட்டு அரச பொரிமுறைகளை பயன்படுத்தி இலக்குகளை எட்ட முடியாது. நிவாரண உதவிகள் போன்ற முறைகளை பயன்படுத்த முடியும். புதிய முறைகள் குறித்து சிந்திக்க வேண்டும். இதன் ஊடாக சிறந்த பயனுள்ள சேவையாக மாற்ற முடியும் .   

அதேபோன்று தேசிய போசாக்குக் கொள்கை திட்டத்தின் ஊடாக குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் மந்த போசனை நிலைமையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். தேசிய போசனைக் கொள்கைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி தாய் சேய் போசனை மட்டத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுப்போம். ஒரு தலைமுறையின் சுகாதாரம் அந்த நாட்டு உற்பத்தி திறனில் தாக்கம் செலுத்துகின்றது. அதற்காக  சுகாதாரத் துறையை பலப்படுத்த வேண்டும் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04
news-image

நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் காணப்படும் வாகனங்களுக்கான...

2025-04-17 20:35:55
news-image

பொய், ஏமாற்று அரசியலுக்கு அதிக ஆயுட்காலம்...

2025-04-17 20:32:42