24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் - சஜித் பிரேமதாச

15 Sep, 2024 | 04:57 PM
image

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தை செயற்படுத்தி, 24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.  

அத்தோடு, இன்று மக்கள் தெளிவான முறையில் தீர்மானம் எடுக்கும் நிலையில் இருக்கின்றார்கள். நாட்டை அழிவின் பக்கம் இட்டுச்செல்லும் ரணில், அநுர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதா? இல்லாவிட்டால் 220 இலட்சம் மக்களையும் ஆட்சி பீடமேற்றும் பொது மக்களின் யுகத்துக்கு மக்கள் வரத்தை வழங்குவதா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

இரத்தினபுரியில் நேற்று சனிக்கிழமை (14) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட  2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 52 ஆவது மக்கள் வெற்றிப்பேரணியில் பெருந்திரளான மக்கள் மத்தியில் உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

இந்நாடு மீண்டும் அபிவிருத்தியை நோக்கிய யுகத்திற்கு செல்வதற்கும் தொழிற்சாலைகள் உருவாகி, தொழில்வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மக்களின் வறுமை நீங்கி மூலை முடுக்கு, கிராமங்கள், நகரங்கள், விருத்தியடைந்து நாடு அபிவிருத்தி அடைகின்ற வேலைத்திட்டத்திற்கு ரணில் - அநுர கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள்.  

ரணில் - அநுர கும்பல் இரவு பகல் பாராது ஐக்கிய மக்கள் சக்தியை தோல்வியடைய செய்ய வேண்டும் என்று சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இந்த சூழ்ச்சிக்குள் நாட்டு மக்கள் சிக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதை தாம் அறிந்திருக்கிறோம். 

கட்டுக்கட்டாக பைல்களை தூக்கிச் சென்ற ஒரு குழுவினர் திருடர்களை பிடிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய சட்டத்தரணிகள் சக்தி உயர்நீதிமன்றத்தை நாடி நாட்டை வங்குரோத்தடையச் செய்த ராஜபக்ஷக்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்து தீர்வு பெற்று, அவர்கள் நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகள் என வெளிக்கொணர்ந்தது. செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்தத் தீர்வின் ஊடாக நட்ட ஈட்டை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்போம். 

இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் துறைக்காக தனியான தேசிய கொள்கை திட்டம் தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளது.

இரத்தினக்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுகின்ற வேலையாட்கள் முதல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழில்துறை ஏற்றுமதியாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், வர்த்தக இடைத்தரகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்காகவும் இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் தேசிய கொள்கை திட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்தோடு 50 கிலோ உரம் ஒரு மூடையை 5000 ரூபாவுக்கு வழங்கி, விவசாயிகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.  

இரத்தினபுரியில் இரத்தினகல் அகழ்வு இடங்களை கோட்டா விற்பனை செய்யும் போது அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம்.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் இரத்தினபுரி உள்ளிட்ட இலங்கையில் இரத்தினக் கல் காணப்படுகின்ற இடங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததது. அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி அதனை நிறுத்தினோம். 

தோட்டத் தொழிலாளர்களுக்காக செய்ய முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மிகப் பெருமளவில் செய்து, தொழில் வாய்ப்பில்லாத இளைஞர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி சமூகத்தில் அபிமானத்துடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம் .  

பெண்களை முன்னிலைப்படுத்தி வறுமையை ஒழிப்போம்

வீடில்லாதவர்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுப்பதோடு இல்லத்தரசிகளை மையமாகக் கொண்ட வறுமை ஒழிப்பு வேலை திட்டத்தை செயற்படுத்தி, 24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வழங்கி வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத்தேர்தல் முடிவடைந்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2024-10-04 02:00:44
news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06