கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஹாகொட ஜயந்தி வீதியில் மர்மமான முறையில் நபரொருவரின் சடலம் இன்று (15) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சடலத்தை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவ்விடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரது உடலின் பல பகுதிகளில் காயங்கள் காணப்பட்டமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த மரணத்துக்கான காரணம் உறுதியாக கண்டறியப்படாத நிலையில், வாகனம் மோதியதில் இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் ஊகிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கடுகஸ்தோட்டை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM