ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம் : இரத்தினக்கல் தொழிற்துறையிலும் தொழில் முனைவோரை உருவாக்குவோம் - சஜித்

15 Sep, 2024 | 04:50 PM
image

இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான சமூக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம். அதன் ஊடாக இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து துறையினரையும் வலுப்படுத்துகின்ற பலமான தேசியக்கொள்கை திட்டத்தை செயற்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஒரு மில்லியன் தொழில் முனைவோர்களை உருவாக்குகின்ற வேலைத்திட்டத்தில் இரத்தினக்கல் தொழிற்துறையிலும் தொழில் முனைவோர்களை உருவாக்குவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இரத்தினபுரி மாவட்ட வர்த்தகர்களுடன் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற சந்திப்பின்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

அத்தோடு இரத்தினக்கல் காணப்படுகின்ற இடங்களை பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் செயற்பாடொன்று உருவாகியது. அதன்போது பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே அதற்கெதிராக குரல் எழுப்பியது.  

வெளிநாட்டு முதலீடுகளை எமது நாட்டிற்கு பெற்றுக்கொள்வதோடு இந்தக் காணிகளினதும் இந்த தொழில்துறைகளினதும் உரிமை எமது நாட்டு மக்களிடமே காணப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் இருக்கின்றோம்.  

பேங்க்கொக், ஹொங்கொங் ஆகிய நகரங்களை போன்று இரத்தினக்கல் வர்த்தகத்தின் தலைமையகமாக எமது நாட்டை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். இதற்குத் தேவையான அனைத்து தீர்மானங்களையும் எடுப்போம். அதற்கான வரிச்சலுகைகளையும் முறையாக செயற்படுத்துவோம்.  

அத்தோடு தேயிலை உற்பத்திக்கான பெறுமதியை உருவாக்கும் செயற்பாடொன்றுக்கும் நாம் செல்ல வேண்டும். தேயிலையின் புதிய உற்பத்திகளின் ஊடாக நாட்டுக்கான டொலர்களைக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர் சமூகத்தையும் இரத்தினக்கல் தொழில்துறையின் பங்காளர்களாக மாற்ற வேண்டும் என்கின்ற புதிய வேலைத்திட்டம் ஒன்றும் தம்வசம் இருக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற...

2024-10-10 22:11:24
news-image

வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி...

2024-10-10 20:25:01
news-image

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை - கே.ரீ.குருசுவாமி

2024-10-10 20:25:53
news-image

கந்தளாய் சீனித் தொழிற்சாலையின் காணியை குறுகிய...

2024-10-10 19:29:28
news-image

பொதுத்தேர்தலில்  11 ஆசனங்களை பெறுவோம் -...

2024-10-10 19:07:53
news-image

முதியவர் கழுத்து நெரித்து கொலை ;...

2024-10-10 20:06:05
news-image

யாழ். மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடவுள்ள...

2024-10-10 18:53:41
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் 

2024-10-10 18:55:08
news-image

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-10-10 21:09:34
news-image

ஜனாதிபதியை சந்தித்தார் பலஸ்தீனத் தூதுவர்  

2024-10-10 17:38:30
news-image

துருக்கித் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும்...

2024-10-10 17:33:57
news-image

வன்னியில் தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல்

2024-10-10 17:34:41