எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகரும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான சுதந்திர தேர்தல் ஆலோசகருமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜகே பர்க்கர் சனிக்கிழமை மாலை (14) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடிய அவர் நேற்று மாலை காத்தான்குடி கஃபே தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்துக்கு சென்று, அங்கு கஃபே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இச்சந்திப்பில் கஃபே தேர்தல் கண்காணிப்பு ஆலோசகர் கலாநிதி எம். தயாபரன் மற்றும் கபே மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தேசமானிய ஏ.எல். மீரா சாஹிபு உட்பட தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வன்முறையற்ற தேர்தல், அமைதியான முறையில் வாக்களிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆலோசிக்கப்பட்டதுடன் வாக்குரிமை இல்லாத பாடசாலை மாணவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக பாடசாலை மாணவர்களால் விநியோகிக்கப்பட்ட வேட்பாளர்களின் பிரசுரங்களும் சர்வதேச கண்காணிப்பு ஆலோசகருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM