தலங்கமையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

15 Sep, 2024 | 07:17 PM
image

தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெகடன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் ஆவார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 450 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right