அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இன்று வரை தமது அடிப்படை பிரச்சினைகளை கூட தீர்க்க முடியாமல் வாழும் சூழலில் எமது மக்களின் இருண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அளிக்கும் தீர்மானத்தை முடிவெடுத்தேன் என முன்னாள் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்கும் வகையில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நான் தமிழரசுக் கட்சியில் அங்கத்துவம் கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் அந்தக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்துள்ளேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் கட்சி தடுமாறி வருகின்றது. கட்சிக்குள் பல கருத்து முரண்பாடுகளும் உறுப்பினர்களுக்கிடையே அதிருப்தி நிலையும் அதிகரித்துவரும் நிலையில் அம்பாறை மாவட்ட மக்களுக்கும் இது தொடர்பில் தெளிவின்மையும் சலிப்புத்தன்மையும் உருவாகிவருகிறது.
அம்பாறை மாவட்ட மக்கள் இருண்ட யுகத்துக்குள் உள்ளார்கள். தமிழ் மக்கள் சுயமாக இயங்க முடியாத நிர்வாக தலையீடுகள், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி இன்மை, காணி மற்றும் எல்லை பிரச்சினைகள், வேலையில்லா திண்டாட்டம், கரையோர இல்மனைட் அகழ்வு , சுகாதார வசதியின்மை என இன்னோரன்ன பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சினைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில் என்னால் பல விடயங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளேன்.
ஆனால் அவை தொடர்பில் எவ்வித முன்னற்றகரமான செயற்பாடுகளும் கட்சியால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. அந்த வகையில் எனது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடன் பல்வேறு கட்ட உரையாடல்களை செய்துள்ளேன். இக்கட்டான நிலவரங்களில் அவர்களோடு தோளோடு தோள் நின்று பல்வேறு பிரச்சினைகளையும் தீர்த்தும் வைத்துள்ளேன்.
எனினும், எமது பிரதேசத்தில் பல்வேறு பிரச்சினைகளையும் தேவைகளையும் முன்கொண்டு செல்ல நெருக்கடியான சூழ்நிலையில் எமது பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் சரியான தலைமைத்துவம் இருக்க வேண்டும் என சிந்தித்தேன் என்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM