நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை

16 Sep, 2024 | 11:41 AM
image

நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுகிழமை (15) ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுகின்றது.

இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை  நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகின்றதுடன் 323,879 பரீட்சார்த்திகள் இதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.  

பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.  

அதேநேரம், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  

முல்லைத்தீவு 

முல்லைத்தீவில்1957 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 24 பரீட்சை நிலையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுகிறது. 

அந்த வகையில் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1381 மாணவர்களுக்காக 16 பரீட்சை நிலையங்களிலும் துணுக்காய் கல்வி வலயத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 576 மாணவர்களுக்காக 08 பரீட்சை நிலையங்களிலுமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 1957 மாணவர்களுக்காக 24 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை காலை மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோன்றுவதை அவதானிக்க முடிந்ததோடு பரீட்சை நிலையங்களுக்கு பூரண பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் 5 கல்வி வலயங்களிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் தோற்றியதை காண முடிந்தது.

காலை வேளையில் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பெரியவர்களிடம் ஆசி பெற்று பாடசாலைகளுக்கு சென்றதை காணமுடிந்தது.

பெற்றோர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை ஆர்வத்துடன் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துவந்ததை காணமுடிந்தது.

மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறுகிறது.

இறுக்கமான நடைமுறைகளுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு  மத்தியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் தோற்றியுள்ளனர். 

காலை 09.30 மணிக்கு ஆரம்பமான பரீட்சையில் தோற்றுவதற்கு பரீட்சார்த்திகள் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்துக்கு சென்றதை காண முடிந்தது.   

கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். 

மேலும் பரீட்சை நிலையங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

பரீட்சையை எவ்வித இடையூறுமின்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

முதலில் மு.ப. 9.30 மணி முதல் பிற்பகல் 10.45 மணி வரை பகுதி ii வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறும் எனவும் மு.ப. 10.45 மணி முதல் பிற்பகல் 12.15 வரை பகுதி i வினாத்தாளுக்கான பரீட்சை இடம்பெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இடைவேளையின்போது மாணவர்கள் வெளியில் செல்லவோ, பெற்றோர் பாடசாலைக்குள் செல்லவோ அனுமதி வழங்கப்படாது என அவர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு நேர காலத்துடன் மாணவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோருக்கும், பாடசாலை அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10