கால் வலியை கண்டறியும் பெரிபேரல் டாப்ளர் பரிசோதனை

Published By: Robert

25 Apr, 2017 | 11:16 AM
image

அலுவலகத்தில் பணியாற்றும் 40 வயதைக் கடந்த பெண்மணிகளாக இருந்தாலும் சரி அல்லது ஆண்களாக இருந்தாலும் ஒன்றிற்கு இரண்டு முறை மாடிப்படி ஏறி இறங்கினால் அவர்களின் இடது கால் அல்லது வலது கால் ஆடுசதை பகுதியில் பிடிப்பு அல்லது சதை இறுக்கம் உண்டாகி வலி ஏற்படும். இளம் வயதில் உடற்பயிற்சி செய்திருந்தாலும் சரி அல்லது தற்போது உடலை டயட்டில் வைத்து கட்டுகோப்பாக வைத்திருந்தாலும் சரி இத்தகைய சதைப்பிடிப்பு உண்டாகி வலி எற்படுவது அதிகரித்து வருகிறது. 

இதற்கு மருத்துவத்துறையினர் peripheral doppler study என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். இத்தகைய சோதனை மூலம், உடலில் கீழ்பகுதிக்கு இரத்தம் அனுப்பும் பணியைச் செய்யும் மகாதமனியில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும், இரத்த உறைந்து கட்டியாக மாறியிருக்கிறதா? என்பதையும் துல்லியமாக அறிய இயலும்.

பொதுவாக எம்முடைய வயிற்று பகுதியின் கீழ் இருக்கும் அயோட்டா என்ற மகாதமனி இரண்டாக பிரிந்து வலது காலுக்கு ஒன்றாகவும், இடது காலுக்கு ஒன்றாகவும் பிரிந்து இரத்தத்தை அனுப்பும் பணியை செய்து வருகின்றன. இத்தகைய இரத்த நாளங்களில் குருதியோட்டம் சீராக நடைபெறவில்லையெனில் இத்தகைய பிரச்சனை தலைத்தூக்கும். இப்பிரச்சினையை தொடக்கத்திலிலேயே கண்டறியாவிட்டால் இரத்தகுழாய்கள் சுருங்கத் தொடங்கும். நாளடைவில் அப்பகுதியில் உள்ள திசுக்கள் அழியத்தொடங்கி கருமை வண்ணத்துக்கு மாறிவிடவும் வாய்ப்புண்டு. அதனால் peripheral doppler study என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் என்ன பாதிப்பு, அதன் வீரியம் குறித்து அறிந்து அதற்கேற்ற மருந்துகளின் மூலம் இதனை சீரமைக்கலாம்.

Dr.பக்தவச்சலம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right