ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் இரவு வேளையில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்று சனிக்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (13) நள்ளிரவு வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மாமாங்கம் பகுதியில் வீதியிலுள்ள மின்சார தூண்கள் மற்றும் சுவர்களில் இருவர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தேர்தல் சட்டத்தை மீறி சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்துள்ளனர்.
அதனையடுத்து, இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM