சசிகுமார் நடிப்பில் எதிர்வரும் இருபதாம் திகதி என்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் நந்தன் எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை திரைப்பட இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான 'செந்தமிழன்' சீமான் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நந்தன்' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். வி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார்.
ஆதிக்க சாதி அரசியலுக்கும் - ஒடுக்கப்பட்ட சாதி அரசியலுக்கும் இடையேயான மோதலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை இரா என்டர்டெயின்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் இரா. சரவணன் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது பட குழுவினருடன் முன்னணி நட்சத்திர இயக்குநர் ஹெச். வினோத், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, 'செந்தமிழன்' சீமான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.
படத்தைப் பற்றி செந்தமிழன் சீமான் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை என் அன்பு நண்பர் இரா சரவணனின் வேண்டுகோளுக்கு ஏற்ப குடும்பத்தினருடன் அண்மையில் பார்த்தேன். இந்தத் திரைப்படம் பல ஆண்டுகளாக இந்த இனம் தூக்கி சுமந்து வரும் வலியை நேர்த்தியான திரை மொழியில் பதிவு செய்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த பிறகு இன்றும் கூட அதன் தாக்கம் எனக்குள் இருக்கிறது.
மனதை தாக்கும் மிக நல்ல படைப்புகளின் வருகை தற்போது குறைந்திருக்கிறது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் சிறந்த படமாக 'நந்தன்' அமைந்திருக்கிறது. நாம் வாழும் இந்த நிலத்தின் கதையை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இது வலியின் மொழி. மக்கள் அனுபவிக்கும் வலியை புரிந்தவர்களுக்கும் உணர்ந்தவர்களுக்கும் இந்த திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.
மேலும் இது ஒரு ஆக சிறந்த படைப்பு. இந்த படைப்பினை வழங்கிய அனைவருக்கும், இந்த படைப்பில் பங்கு பற்றிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றியடைய வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM