நகைச்சுவை நடிகராக வெற்றிகரமாக பயணித்து,பின் கதையின் நாயகனாக உயர்ந்து, தனித்துவமான நட்சத்திர நடிகராக உலா வரும் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சட்டம் என் கையில்' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
'சிக்ஸர்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சட்டம் என் கையில்' எனும் திரைப்படத்தில் சதீஷ், அஜய் ராஜ், பவெல் நவகீதன், மைம் கோபி, ரித்திகா, கே பி ஒய் சதீஷ், வித்யா பிரதீப் , எழுத்தாளரும், நடிகருமான பவா செல்லதுரை, இயக்குநரும், வசனகர்த்தாவும், நடிகருமான ஈ. ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்திருக்கிறார்.
புலனாய்வு விசாரணை வகைமையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை சண்முகம் கிரியேசன்ஸ் மற்றும் சீட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளி கிருஷ்ணன் ,ஆனந்த கிருஷ்ணன் சண்முகம் ,ஸ்ரீ ராம் சத்ய நாராயணன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் சதீஷ் இயல்பான மற்றும் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், படத்தின் காட்சிகள் காவல்துறையின் விறுவிறுப்பான புலனாய்வு விசாரணை தொடர்பாக இருப்பதாலும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என அவதானிக்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்து வெளியான 'வித்தைக்காரன்' எனும் திரைப்படம் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெறாததால் அவருடைய நடிப்பில் தயாராகும் 'சட்டம் என் கையில்' எனும் திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM