கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' பட அப்டேட்

Published By: Digital Desk 2

14 Sep, 2024 | 05:25 PM
image

'டாடா', 'ஸ்டார்' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு நானும் ஒரு நட்சத்திர நடிகர் தான் என சுயமாக அறிவிப்பை வெளியிட்டு, ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் பட குழுவினர் பிரத்யேக பாடலையும் , பாடலுக்கான காணொலியையும் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' எனும் திரைப்படத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ் ராஜ்,  சுனில் சுகதா,  டி. எம். கார்த்திக், ஹர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்ஷயா ஹரிஹரன், திவ்யா விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை பிளமென்ட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் தீபாவளி திருநாளன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது.

 அந்த வகையில் 'நான் யார்?' எனும் பிரத்யேக பாடலையும், பாடலுக்கான காணொளியையும் வெளியிட்டிருக்கிறது.

 இந்த பாடலை பாடலாசிரியர் விஷ்ணு எடவன் எழுத, பின்னணி பாடகர் ஆர்கே ஹரி பிரசாத் ரமணி பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கான காணொளியை பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கிறார்.

 இதன் காரணமாகவே இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

 இந்த பாடல் கடந்த தசாப்தங்களில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ஒரு திரைப்பட பாடலை நினைவு படுத்துகிறது என்றாலும் அதனை நவீன காலத்திற்கு ஏற்ப ரசிக்கும் வகையில் உருவாக்கி இருப்பதால் பார்வையாளர்களின் பாராட்டை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வருணன் - திரைப்பட விமர்சனம்

2025-03-17 18:17:49
news-image

இயக்குநர் ஜெகன் நடிக்கும் 'ரோஜா மல்லி...

2025-03-17 16:47:25
news-image

கார்த்தியின் 'கைதி 2' படத்தை உறுதி...

2025-03-17 16:47:54
news-image

சாதனை படைத்து வரும் அஜித் குமாரின்...

2025-03-17 16:37:22
news-image

விஷ்ணு விஷால் நடிக்கும் 'இரண்டு வானம்'...

2025-03-17 16:02:47
news-image

புதுமுக நடிகர் வீரன் கேசவ் அறிமுகமாகும்...

2025-03-17 16:02:13
news-image

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு விடுத்துள்ள...

2025-03-17 11:33:23
news-image

வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரகுமான்...

2025-03-16 12:52:40
news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46