மீரிகம, பொகலகம பிரதேசத்தில் உள்ள இரண்டு கட்சி அலுவலகங்களுக்கும் திவுலபிட்டிய கித்துல்வல பிரதேசத்தில் உள்ள கட்சி அலுவலகம் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டு, அந்த அலுவலகங்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
கித்துல்வல கினிதம்மமன சந்தியில் அமைந்துள்ள கட்சி அலுவலகம் ஒன்றின் பெயர்ப் பலகைகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன், ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹீதிவல கிராமத்தில் உள்ள அலுவலகத்தின் பெயர்ப்பலகைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு கட்சி அலுவலகத்தின் பெயர்ப் பலகைகளும் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து தீப்பெட்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹீதிவல பகுதியில் எரிக்கப்பட்ட இரண்டு கட்சி அலுவலகங்களுக்கு அருகில் வைத்து கையால் எழுதப்பட்ட சில சுவரொட்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுவரொட்டிகள் பொலிஸ் விசாரணையை திசை திருப்பும் முயற்சியாக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM