(நா.தனுஜா)
இவ்வருடத்தின் ஏப்ரல் - ஜுன் வரையான 3 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக அதிகரித்திருப்பதன் மூலம், இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் முன்னெதிர்வுகூறப்பட்டதை விடவும் மிகவேகமான வளர்ச்சியைப் பதிவுசெய்திருக்கிறது.
புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி இவ்வருடம் ஜனவரி - மார்ச் மாதம் வரையான முதலாம் காலாண்டில் 5.3 சதவீதமாகப் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தி, இரண்டாம் காலாண்டில் 4.7 சதவீதமாகப் பதிவாகியிருக்கின்றது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் இது கணிசமானளவு அதிகரிப்பாகும்.
அதேபோன்று இக்காலப்பகுதியில் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகள் முறையே 1.7 சதவீதம், 10.9 சதவீதம் மற்றும் 2.5 சதவீதமாக உயர்வடைந்திருக்கின்றன.
இது இவ்வாறிருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கும் பின்னணியில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 302 ரூபாவாகப் பதிவாகியிருக்கிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM