பச்சிளம் குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ,நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், நாட்பட்ட தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆகியோர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் போது அவர்களுடைய உடல் அந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்வதற்கு இயல்பான கால அவகாசத்தை விட கால தாமதத்துடன் எதிர்வினையாற்றினால் அத்தகைய நிலைக்கு மருத்துவ மொழியில் செப்சிஸ் என குறிப்பிடுகிறார்கள்.
மேலும் இத்தகைய தருணத்தில் உடலில் ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளில் சம சீரற்ற தன்மை ஏற்படுவதால் உறுப்புகள் சேதமடைந்து, உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
இதனால் செப்சிஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, பிரத்யேக நவீன மருந்தியல் சிகிச்சைகளின் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சையை வழங்கி நிவாரணம் வழங்கப்படுகிறது என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
மனநிலையில் தடுமாற்றம், சுவாசத்தில் சீரற்ற தன்மை, காரணமின்றி வியர்வை வெளியேறுதல், நடுக்கம், வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுதல், கடுமையான இருமல் ஆகியவை இத்தகைய நோய் தொற்றின் அறிகுறிகள் என குறிப்பிடலாம்.
மேலும் சிலருக்கு இத்தகைய நோய் தொற்று அதிர்ச்சியாக மாறி உயிரை பறிக்கக் கூடும். இத்தகைய தருணத்தில் நோயாளிகளுக்கு எழுந்து நிற்க முடியாத நிலை, ஆழ்ந்த உறக்கம் அல்லது கண் விழிப்பதில் சிரமம், குழப்பம் போன்ற அறிகுறிகளும் ஏற்படும்.
இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டவுடன் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்திய நிபுணர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதுடன் குருதி பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, உமிழ்நீர் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பர்.
பாக்டீரியா தொற்று, வைரஸ் தொற்று, பூஞ்சை காளான் தொற்று, நுரையீரல் தொற்று, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டுள்ள தொற்று, ஜீரண மண்டலத்தில் ஏற்பட்டுள்ள தொற்று, ரத்த ஓட்ட பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்று, காயங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய செப்சிஸ் எனப்படும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
பரிசோதனையின் முடிவுகளை பொறுத்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளின் மூலம் இதற்கு உடனடியாக நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் கலாவதி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM