இன்றைய சூழலில் கடன் வாங்காமல் தொழில் செய்ய இயலாது.கடன் வாங்காமல் தொழிலை தொடர்ந்து செய்ய இயலாது. கடன் வாங்காமல் தொழிலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல இயலாது. கடன் வாங்காமல் நாளாந்த வாழ்க்கையை வாழ இயலாது. இப்படி கடன் வாங்கி ஒவ்வொரு நாளையும் கழித்து கொண்டிருப்பவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு தெரிந்த முறையில் நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த நெருக்கடிகள் ஒரு புள்ளிக்கு மேல் உளவியல் ரீதியாக பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து உழைப்பதற்கான ஆரோக்கியமான மன ஓட்டத்தை பாதிக்க செய்துவிடும்.
இதனால் மனதளவில் சோர்ந்து, கடன் சுமை அதிகரித்து, மரணத்தைக் கூட விரைவில் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்க தொடங்குவர்.
இந்தத் தருணத்தில் கடன் பிரச்சனையை எதிர்கொள்ள நாளாந்தம் வரவேண்டிய பண வரவை விட கூடுதலாக பணவரவு ஏற்பட்டால் மட்டுமே இதனை முக மலர்ச்சியுடன் எதிர்கொள்ள இயலும் இதற்காகவும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் எளிய முறையிலான இறை வழிபாட்டையும், பரிகாரத்தையும் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் அல்லது யாரேனும் சொந்தமாக காணி வைத்து அதில் நெல்லை விதைத்து உழவு செய்து கொண்டிருந்தால் அவர்களை சந்தித்து அவர்களின் காணியில் அறுவடைக்கு முன்னர் தென்மேற்கு மூலையில் உள்ள கதிர்களில் நன்றாக செழித்து தலை சாய்ந்திருக்கும் கதிர்களில் ஆறு கதிர்களை மட்டும் சேகரித்து நீங்கள் உங்களுடைய வீட்டுக்கு வந்து விடுங்கள்.
அதன் பிறகு அந்த ஆறு நெற்கதிர்கள் மற்றும் சதுர வடிவிலான மஞ்சள் வண்ண துணி ஆகிய இவற்றை எடுத்துக் கொண்டு உங்களுடைய குலதெய்வ ஆலயத்திற்கு அல்லது குலதெய்வத்தை மனதில் தியானித்து வழிபட வேண்டும்.
அந்த தருணத்தில் கழுத்தை நெரிக்கும் அளவிற்கு அதிகரித்த கடன் சுமையிலிருந்து விடுதலை பெற கூடுதலான பணவரவு ஏற்பட வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தனை செய்து கொண்டு, மஞ்சள் வண்ண துணியில் அந்த ஆறு நெற்கதிர்களையும் வைத்து முடிச்சிட வேண்டும்.
அதன் பிறகு அந்த நெற்கதிர்கள் அடங்கிய முடிச்சினை உங்களுடைய வீட்டிற்கு எடுத்து வந்து அதனை உங்கள் வீட்டின் பிரம்ம ஸ்தானம் எனப்படும் பகுதியில் கட்டி விடுங்கள்.
பிரம்ம ஸ்தானம் என்பது நீங்கள் வசிக்கும் வீட்டின் மைய பகுதி என்பது தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயம்.
அந்த பிரம்மஸ்தானம் எனும் பகுதியில் அந்த மஞ்சளும், நெற்கதிரும் இணைந்த முடிச்சினை கட்டி விட வேண்டும்.
அத்துடன் மட்டும் இல்லாமல் அந்த முடிச்சினை கட்டி முடித்த பின் வரும் வெள்ளிக்கிழமையன்று காலை சுக்கிர ஓரை தருணத்தில் அதற்கு தூப தீபம் காட்ட வேண்டும். அந்தத் தருணத்தில் 'ஓம் மகாலட்சுமியே நமஹ' எனும் மந்திரத்தை தொடர்ச்சியாக 21 முறை உச்சரிக்க வேண்டும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த தூப தீபத்தை காட்டி, மந்திரத்தை உச்சரித்து ஒருமுகமான மனதுடன் வழிபடும்போது உங்களுடைய தொழிலில் அதிகப்படியான வருவாய் வருவதும் அதனை கடன்காரர்களுக்கு வழங்குவதும் நடைபெறும்.
தொடர்ச்சியாக ஏழு வெள்ளிக் கிழமைகளுக்கு மஞ்சள் வண்ண துணியில் கட்டிய நெற்கதிருக்கு தூப தீபம் காட்டி வழிபடும்போது உங்களது கடன் பிரச்சனை குறையத் தொடங்கி தொழிலை உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் நடத்த வேண்டும் என்ற எண்ணம் மேம்பட்டு, மகிழ்ச்சி பரவுவதை அனுபவத்தில் உணரலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM