பி சி ஓ டி பாதிப்பு : எளிய சிகிச்சை முறை

Published By: Digital Desk 2

14 Sep, 2024 | 04:14 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறை பெண்களும், பெண்மணிகளும் தங்களுடைய வாழ்வியல் நடைமுறைகளையும், உணவியல் நடைமுறைகளையும் கடந்த தசாப்தங்களில் எம்முடைய மூத்த பெண்மணிகள் பின்பற்றிய உணவு நடைமுறை மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிராகவும், மாற்றாகவும் புதிய வழியினை தொடர்ச்சியாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

 இதன் காரணமாக அவர்கள் சீரற்ற மாதவிடாய் சுழற்சி, வலியுடன் கூடிய மாதவிடாய் சுழற்சி, மகப்பேறின்மை, வளர்ச்சிதை மாற்ற குறைபாடுகள் என பல்வேறு உடலியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.

 எளிய சிகிச்சை முறைகள் மூலம் இதனை களைந்து முழுமையான ஆரோக்கியத்துடன் வாழ்க்கை முழுவதும் வாழ இயலும் என வைத்திய நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பி சி ஓ டி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசிஸ் எனும் பாதிப்பு ஏற்பட்டால் கருப்பையில் நீர் கட்டிகள் உண்டாகி, தொல்லைகளை ஏற்படுத்தும்.

இதற்கு உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் முழுமையான நிவாரணத்தை பெறலாம்.‌

இதற்கு பாதிக்கப்பட்ட பெண்களும் , பெண்மணிகளும் முதலில் மனதளவில் தயாராக வேண்டும்.

அவர்கள் தங்களின் நாவின் சுவையை கட்டுப்படுத்திக் கொண்டு, வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவு முறை மற்றும் உணவு பட்டியலை முழுமையாக பின் தொடர வேண்டும்.

அத்துடன் நாளாந்தம் காலை & மாலை என இரண்டு வேளைகளிலும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றை 15 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் ஒரு வகையினதான வைத்தியர்கள் பரிந்துரைத்த உணவு முறையையும், மாலை 6 மணிக்கு பிறகு காலை ஆறு மணி வரை எதையும் உட்கொள்ளாத விரத முறையையும் பின்பற்ற வேண்டும்.

இதனை வைத்தியர்களின் வழிகாட்டலுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும்போது இயல்பான அளவை விட மிகவும் குறைந்து விட்ட உங்களுடைய வளர்ச்சிதை மாற்ற குறைபாட்டில் சீரான தன்மை ஏற்பட்டு, இத்தகைய பாதிப்பு குறைய தொடங்கும்.‌

வளர்ச்சிதை மாற்றத்தில் சம சீரற்ற தன்மை ஏற்பட்டதால் உண்டான மாதவிடாய் சுழற்சி கோளாறுகள் படிப்படியாக நீங்கி, அவை இயல்பு தன்மையை மீண்டும் அடையும். 

அதன் பிறகு வைத்திய நிபுணர்கள் பரிந்துரைக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை ஓராண்டு வரை தொடர்ந்து கடைபிடித்தால் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மை முழுமையாக சீரடைந்து உங்களுடைய கருப்பையில் ஏற்பட்ட நீர்க்கட்டி பாதிப்பு முழுமையாக நிவாரணம் பெறும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஒருபோதும் சுயமாக உணவு முறை மாற்றம் மற்றும் உடற்பயிற்சியில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால் அதனால் கூட வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும்.

இதனால் உங்களுக்கு பி சி ஓ டி எனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக மாதவிடாய் சுழற்சியில் சமசீரற்ற தன்மை மற்றும் மகப்பேறின்மை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் வைத்திய நிபுணர்களை சந்தித்து அவர்கள் உங்களுடைய மருத்துவ வரலாறை துல்லியமாக அவதானித்து, உங்களுக்கென்று பிரத்யேகமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியினை வடிவமைத்து பரிந்துரை செய்வார்கள்.

அதனைத் தான் நீங்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

வைத்தியர் ஸ்ரீ தேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடுக்கத்துக்கு நவீன சிகிச்சை

2024-10-09 19:17:56
news-image

டிரிக்கர் ஃபிங்கர் எனும் கை விரலில்...

2024-10-08 17:11:34
news-image

கருவிழி மாற்று சத்திர சிகிச்சை...!?

2024-10-05 17:31:43
news-image

அறிவாற்றல் குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-10-04 17:07:05
news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17