அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரின் பெயரில் மாற்றம்

Published By: Digital Desk 3

14 Sep, 2024 | 01:32 PM
image

அந்தமான், நிக்கோபார்  தீவுகளின் தலைநகர் “போர்ட் பிளேயர்” பெயர் “ஸ்ரீ விஜயபுரம்” என மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் அந்தமான், நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகராக போர்ட் பிளேயர் உள்ளது.

இந்நிலையில், தலைநகர் போர்ட் பிளேயரின் பெயரை மாற்றவுள்ளதாக  இந்தியா அறிவித்துள்ளது.

போர்ட் பிளேயரின் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என்று மாற்றவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா இன்று வெள்ளிக்கிழமை (13) வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய உள்விவகார அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

காலனி ஆதிக்க (ஆங்கிலேய ஆட்சியின்) முத்திரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற (இந்திய) பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உத்வேகம் பெற்று போர்ட் பிளேயர் பெயரை ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். சோழ பேரரசின் கடற்படை தளமாக செயல்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் சுதந்திர போராட்ட வரலாற்றில் ஈடுஇணையற்ற இடம்பிடித்துள்ளது. தற்போது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய தளமாகவும் திகழ்கிறது' என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பகுதி...

2024-10-10 17:08:28
news-image

மில்டன் சூறாவளி கரையைக் கடந்தது: புளோரிடா...

2024-10-10 14:08:33
news-image

ஹெஸ்புல்லா அமைப்பு ரொக்கட் தாக்குதல் -...

2024-10-10 06:10:14
news-image

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

2024-10-10 00:55:52
news-image

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான தேர்தலில்...

2024-10-09 16:53:56
news-image

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது...

2024-10-09 16:51:03
news-image

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன ராணுவ...

2024-10-09 15:15:17
news-image

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள...

2024-10-09 14:54:38
news-image

“நஸ்ரல்லாவுக்கு அடுத்த ‘வாரிசுகளையும்’ அழித்துவிட்டோம்; இனி...

2024-10-09 13:50:55
news-image

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும்...

2024-10-09 11:06:53
news-image

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் -...

2024-10-08 15:24:27
news-image

ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில்...

2024-10-08 12:04:22