'மாரி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமான மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான டொவினோ தோமஸ் அவருடைய திரையுலக பயணத்தில் நடித்திருக்கும் ஐம்பதாவது திரைப்படம் ஏ ஆர் எம் அதாவது அஜயன்ட ரெண்டாம் மோக்ஷணம். தமிழில் 'அஜயனின் இரண்டாவது திருட்டு'. இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனான டொவினோ தோமஸ் அஜயன் , மணியன் ,குஞ்சிகெளூ , என மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் .
முப்பரிமாண தொழில்நுட்பத்தில் உருவான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
பாட்டி கதாபாத்திரம் ஒன்று தனது பேரனுக்கு பாட்டன் பற்றியும் திருட்டு தொழில் என்பது எளிதானதல்ல.
வீரம் செறிந்தது என்றும் கதையாக சொல்லத் தொடங்குகிறார்.
அந்தக் கதையில் கடந்த நூற்றாண்டில் விண்கல் ஒன்று கேரளாவில் அரிப்புரம் எனும் இடத்தில் விழுகிறது.
அந்த விண்கல் அற்புத சக்தி படைத்தது என்பதால் அதில் ஒரு சிலையை செதுக்குகிறார்கள். அந்த சிலையை அப்போது அந்தப் பகுதியை ஆட்சி செய்யும் மன்னர் ஒருவர் அந்த விளக்கை அரிபுரத்து மக்களுக்கு வழங்காமல் வேறு ஒரு நகரத்திற்கு எடுத்துச் சொல்கிறார்.
அந்த விளக்கு உள்ள நகரம் செல்வ செழிப்புடன் திகழ்கிறது. இதனால் அரிபுரத்து மக்கள் அந்த விளக்கை எப்படியாவது தங்கள் பகுதிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என விரும்புகிறார்கள்.
இந்தத் தருணத்தில் அப்போது ஆட்சி செய்யும் மன்னரின் மகனான இளவரசனை அந்நியர்கள் வரி வசூலிப்பது தொடர்பாக கைது செய்து கொடுமைப்படுத்துகிறார்கள்.
இதனை அறிந்த பிரபல திருடன் இளவரசனை அந்த அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து காப்பாற்றுகிறார். அப்போது அந்த மன்னர்' இந்த அரசரின் மண்ணின் மானத்தை காப்பாற்றி விட்டாய். உனக்கு என்ன பரிசாக வேண்டும்?' என கேட்க, அவர் எங்கள் அரிபுரத்திலிருந்து அரசவைக்கு கொண்டுவரப்பட்டிருக்கும் அந்த சிலையை கேட்கிறார்.
மன்னரும் அதனை திருடனுக்கு பரிசாக வழங்குகிறார். அந்த சிலையை ஊர் மக்களிடம் திருடன் ஒப்படைத்தவுடன் திருடன் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்பதால், அதனை ஒரு ஆலயத்தில் வைத்து வழிபட தொடங்குகிறார்கள்.
சாதிய ஆதிக்கத்தின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்குள் உள்ளே அனுமதிக்க மறுப்பதுடன் வருடத்திற்கு ஒரு முறை தான் அந்த விளக்கு வெளியில் எடுத்து திருவிழாவை நடத்தி, அதன் பிறகு மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுவார்கள்.
இந்த பழக்கத்தினால் அரிபுரத்து மக்கள் அந்த சிலையை காண்பது அரிதாகி விடுகிறது.
இந்த நிலையில் அந்த சிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்பதால் அதனை லண்டனில் நடைபெறும் அரிய பொக்கிஷ பொருள்களுக்கான ஏலத்தில் இடம்பெறச் செய்வதற்காக ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
இந்த கும்பல் திருட்டு பரம்பரையை சேர்ந்த அந்த அரிபுரத்தில் மின் சாதன பொருட்களை பழுது பார்க்கும் பொறியாளராக பணியாற்றும் நாயகனை தெரிவு செய்கிறது.
நாயகன் அந்த ஊரில் ஆதிக்க சாதியைச் சார்ந்த நாயகியை காதலிக்கிறார். நாயகியின் தந்தை தான் நாயகனின் தாத்தாவான திருடனை நெருக்கடிக்கு ஆளாக்கி மலை மீதிருந்து தற்கொலைக்கு தூண்டியவர்.
அதனால் அவருக்கு நாயகனை பிடிக்காது. அத்துடன் திருடன் என்ற முத்திரையும் குத்தி நாயகனை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக அவர் ஊரில் நடக்கும் சிறிய திருட்டுகளுக்கெல்லாம் நாயகன் மீது காவல் நிலையத்திலும் புகார் தருகிறார்.
இந்தத் தருணத்தில் அந்த சிலையை திருடும் கும்பல் ஆலயத்திலிருந்து அந்த சிலையை திருடுகிறது. ஆனால் அந்த சிலை போலி என தெரிய வருகிறது. உண்மையான சிலை எங்கே இருக்கிறது? அதனை நாயகன் எப்படி கொண்டு வந்தார்? நாயகன் தன் காதலியை கரம் பிடித்தாரா இல்லையா? ஆலயத்திற்குள் அனுமதிக்க மறுக்கும் தன் தாயாரை ஆலய பிரவேசம் செய்ய வைத்தாரா? இப்படி பல கேள்விகளுக்கு விடையளிப்பது தான் இந்த 'ஏ ஆர் எம்' படத்தின் கதை.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஃபேண்டஸி கலந்த கதையை இயக்குநர் ஜித்தின் லால், மூன்று தலைமுறை கதையாக முப்பரிமாணத்தில் சொல்லி இருக்கிறார்.
பிரம்மாண்டமான எக்சன் காட்சிகள் பிரம்மாண்டமான கழுகு பார்வை காட்சிகள் என பிரம்மாண்டத்திற்கு குறைவில்லை. ஆனால் சுவாரசியம் மிஸ்ஸிங்.
டொவினோ தோமஸுக்கு கீர்த்தி ஷெட்டி , ஐஸ்வர்யா ராஜேஷ் , சுரபி லக்ஷ்மி என மூவர் ஜோடி.
இதற்கு ஏற்ற வகையில் டொமினோ தோமஸ் நவீன கால இளைஞனாகவும், நீண்ட முடியுடன் அரசர் காலகட்டத்திய திருடனாகவும், மற்றொரு தோற்றத்திலும் என மூன்று வேடங்களில் வித்தியாசமாக தோன்றியிருக்கிறார்.
நான் லீனியர் பாணியில் சொல்லப்பட்ட திரைக்கதையில் சில இடங்களில் மட்டுமே பிரமிப்பு இருக்கிறது.
படத்தின் திரைக்கதை பயணத்தை ரசிகர்களால் எளிதாக ஊகித்து விட முடிகிறது. இது படத்தின் பலவீனம்.
ஆனாலும் பின்னணி இசை ஒளிப்பதிவு நட்சத்திர நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை ரசிகர்களை ஆறுதல் படுத்துகிறது.
சிலை போலி என்பது தெரிய வந்ததும் உண்மையான சிலை குறித்த நாயகனின் தேடலில் புதிய சுவாரசியமான திருப்பங்கள் ஏதும் இல்லாததால் அதற்கான வி எஃப் எக்ஸ் உழைப்பும் வீணாகிறது. அனைத்தும் பல வீடியோ கேம்ஸ்களை நினைவுபடுத்துகிறது.
படத்தில் நாயகன் டொவினோ தோமஸ் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் களரி விளையாட்டு மற்றும் தற்காப்பு கலை தொடர்பான காட்சிகளில் நேர்த்தியான உடல் மொழியால் ரசிகர்களை கவருகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் - ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் இரண்டே காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் ரோகிணிக்கு சில காட்சிகளில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தன் அனுபவத்தின் மூலம் மெருகேற்றுகிறார்.
இளம் ரசிகர்களை கவர்வதற்காக இடம் பெற்றிருக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி வழக்கம்போல் நாயகனை காதலிக்கிறார்.
தனிமையில் சந்திக்கிறார் ;முத்தமிடுகிறார்; டூயட் ஆடுகிறார்;அவ்வளவுதான். ஹரிஷ் உத்தமனின் கதாபாத்திரம் அழுத்தமாக எழுதப்படாமல் மேலோட்டமாக எழுதப்பட்டிருப்பதால் அவரின் உழைப்பு வீண். நாயகனுக்கு தோழனாக நடித்திருக்கும் நடிகர் பசில் ஜோசப் சில இடங்களில் தன் இருப்பை நிரூபிக்கிறார்.
அஜயனின் இரண்டாவது திருட்டு- சோபிக்காத பான் இந்திய மசாலா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM