நாளை 15 ஆம் திகதி நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவடைந்ததும் மாணவர்களை சுதந்திரமாக நடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களது பிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் பெற்றோர்களிடம் விசேட வைத்திய நிபுணர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம் கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்து பார்ப்பதில் பலனில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும் இடையூறுகளில் ஒன்று எனவும், வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் எனவும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் , புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களது குழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM