ஆபிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதன்முதலில் குரங்கம்மை தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
ஆபிரிக்க நாடான கொங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆபிரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது.
பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் கட்டிகள் தோன்றும். இறப்பு ஏற்படும்.
இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, 'பவாரியன் நார்டிக்' எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார ஸ்தாபனம் அந்த தடுப்பூசிக்கு நேற்று அனுமதி வழங்கியது.
அந்த அனுமதியில், இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளிடையே குரங்கம்மை அதிகம் பரவியிருந்தால், அந்த சூழலில் தடுப்பூசியின் ஆபத்துக்களை விட, நன்மை அதிகம் எனில் அப்போது பயன்படுத்தலாம் என, தெரிவிக்கப்ட்டுள்ளது.
தடுப்பூசி தேவைப்படும் ஆபிரிக்க நாடுகளுக்கு அதிகளவில் கொள்முதல், நன்கொடை போன்றவை வாயிலாக விநியோகிக்க உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM