'இளைய திலகம்' பிரபு - 'ரைசிங் ஸ்டார்' வெற்றி முதன்முறையாக கதையின் நாயகர்களாக இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கு 'ராஜ புத்திரன்' என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் மகா கந்தன் இயக்கத்தில் உருவாகும் 'ராஜ புத்திரன்' எனும் திரைப்படத்தில் பிரபு, வெற்றி, கோமல் குமார், கிருஷ்ண பிரியா, மன்சூர் அலிகான், ஆர். வி. உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன் , தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆலிவர் டேனி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு நவ்பல் ராஜா இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை கிரஸண்ட் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. எம் .ஷபி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கி இருக்கிறது.
விரைவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட நாட்கள் கழித்து அற்புதமான கிராமத்து பின்னணியிலான கதையில் நடிகர் பிரபு தோன்றுவதால் 'ராஜ புத்திரன்' படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM