திருமண நிகழ்விற்கு சென்ற வேன் விபத்து ; தந்தை பலி, தாய் மற்றும் மகன் காயம்

14 Sep, 2024 | 10:58 AM
image

களுத்துறை - ஹொரணை வீதியில் படவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற வேன் விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.

பொக்குனுவிட்ட , வெலிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்வொன்றுக்குச் செல்வதற்காக களுத்துறையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் கவிழ்ந்து வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, வேனில் பயணித்த தந்தை,  தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ள நிலையில் கல்பாத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தாயும் மகனும் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06