வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார் பிரதேச கலாசார விழா நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் சர்வமத தலைவர்கள் பங்கேற்க, பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் ஏனைய விருந்தினர்களாக மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) ய.பரந்தாமன், மேலதிக மாவட்ட செயலாளர் (காணி)மா.சிறிஸ்கந்த குமார், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதி பணிப்பாளர் லாஹினி நிருபராஜ், மன்னார் கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் அ.மரின் குமார், கலாபூசனம் ஜோன் பொஸ்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் விருந்தினர்கள் கலாசார பேரணி ஊடாக மன்னார் நகர சபை மண்டபம் வரை மங்கள வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் நகரசபை மண்டபத்தில் கலாசார நிகழ்வுகள் நடைபெற்றதோடு, பரிசளிப்பு நிகழ்வு மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM