பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசிய அழகு கலை நிலைய பணிப்பெண்ணுக்கு விளக்கமறியல் 

14 Sep, 2024 | 10:53 AM
image

பெண்ணின் தலை முடி உதிர்ந்து விழும் அளவுக்கு கிரீம் வகைகளைப் பூசி பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்த அழகு கலை நிலையம் ஒன்றின் பணிப்பெண்ணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தலைமறைவாகியுள்ள அந்நிலையத்தின் உரிமையாளருக்கும் மற்றுமொரு பணிப்பெண்ணுக்கும் வெளிநாட்டு பயணத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பணிப்பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

மினுவாங்கொடை பொரகொடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவர் திருமண நிகழ்வொன்றுக்கு செல்வதற்காக தனது தலை முடியை அழகு படுத்த கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி அன்று மினுவாங்கொடை நகரத்தில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த அழகு கலை நிலையத்தின் பணிப்பெண்கள் இந்த பெண்ணின் தலைமுடியில் கிரீம் வகைகளை  பூசியுள்ளனர். 

இதன்போது, இந்த பெண்ணின் தலைமுடிகள் திடீரென உதிர்ந்து விழுந்துள்ளன.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அந்நிலையத்தின் உரிமையாளரும் இரண்டு பணிப்பொண்களும் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில், ஒரு பணிப்பெண் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தல்...

2025-02-18 11:34:40
news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 11:27:31
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26