கடந்த ஆறு ஆண்டுகளில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 332,084 ஆக குறைவடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2018 ஆம் ஆண்டு வரை அரச பாடசாலைகளில் 4,214,772 மாணவர்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 3,882,688 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் , கடந்த 6 ஆண்டுகளில் அரச பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் 9,547 ஆக குறைந்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 6 ஆண்டுகளில் தனியார் பாடசாலைகளின் எண்ணிக்கை பதினைந்தால் அதிகரித்துள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்த 80 தனியார் பாடசாலைகள் கடந்த ஆண்டில் 95ஆக அதிகரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 5,138 இருந்ததாகவும், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளதாகவும் மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறையின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் , பொருளாதாரம் , சமூக மாற்றங்கள் மற்றும் மக்கள் இடம்பெயர்வு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சமூகவியலாளர்கள் நம்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM