நாட்டில் மீண்டும் வன்முறை தலை தூக்குகின்றது; மக்களுக்கு பேச்சுரிமையும் அரசியல் உரிமையும் இல்லை - சஜித் பிரேமதாச

Published By: Vishnu

13 Sep, 2024 | 08:49 PM
image

நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது. பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும்,  மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள். ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள். குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள் எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள். வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19
news-image

இசை நிகழ்ச்சியில் வன்முறை ; 6...

2025-03-16 17:13:20
news-image

சமிக்ஞை கட்டமைப்பு செயலிழப்பு ; ரயில்...

2025-03-16 16:37:30
news-image

வெலிகம துப்பாக்கிச் சூடு ; கொழும்பு...

2025-03-16 17:40:18
news-image

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர்...

2025-03-16 17:04:07
news-image

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள்...

2025-03-16 15:55:11
news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

எரிபொருள் குழாயில் சேதம்

2025-03-16 17:24:44
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39