கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி 

13 Sep, 2024 | 04:43 PM
image

கிண்டர்நோத்ஹில் (KNH) நிறுவனத்தின் நிதி உதவியில் சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் விற்பனை கண்காட்சி இன்று (13) கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நடைபெற்றது.

"வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள்" எனும் தொனிப்பொருளிலான இக்கண்காட்சி இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

இந்த கண்காட்சியினை கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

சுய உதவிக் குழு பெண்களை வலுப்படுத்தும் நோக்கில், சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை சுமார் 40 விற்பனை கூடாரங்கள் அமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டுசென்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பனை அபிவிருத்திச் சபை முகாமையாளர் பார்த்தீபன், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் திட்ட முகாமையாளர் கமலேஸ்வரி, திட்ட இணைப்பாளர் ரஜீமா, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உதயனி, துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்சி ஆசிரியர்கள், சுய உதவிக் குழுக்களின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-08 18:04:34
news-image

கலைகள் சங்கமிக்கும் 'ஆவர்த்தனா'வின் "நாத பரதம்"

2024-10-08 20:30:10
news-image

கவிஞர் புத்தளம் மரிக்கார் எழுதிய இரு...

2024-10-08 15:07:57
news-image

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் சானிட்டரி...

2024-10-08 08:49:42
news-image

இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் 'கலாலயா’...

2024-10-07 14:57:33
news-image

திருகோணமலையில் மாற்றுத்திறனாளிக்கு வாழ்வாதார உதவி வழங்கி...

2024-10-06 09:47:56
news-image

நுவரெலியாவில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு

2024-10-05 16:44:16
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2024-10-05 16:11:54
news-image

யாழ். பல்கலையில் “கனலி” மாணவர் சஞ்சிகையின்...

2024-10-04 19:24:53
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா : சர்வமதப்...

2024-10-04 19:12:03
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் நவராத்திரி...

2024-10-04 18:59:37
news-image

"நாத வந்தனம்" வீணை இசை நிகழ்வு 

2024-10-04 18:44:18