(எம்.ஆர்.எம்.வசீம்)
வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை பாதுகாத்த அரசியல் அனுபவமும் ஆளுமையும் உள்ள ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதா அல்லது எந்த அனுபவமும் பொருளாதார திட்டமும் இல்லாத சஜித், அனுரவை வெற்றிபெறச் செய்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
செய்நன்றியுள்ள மக்கள் சரியான தீர்மானம் எடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த முறை ஜனாதிபதி தேர்தல் கடந்த கால தேர்தல்கள் போன்று வெறுமனே அதிகாரத்தை கைப்பற்றும் தேர்தல் அல்ல. மாறாக வங்குராேத்து அடைந்திருந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்யெழுப்ப சிறந்த பொருளாதார திட்டம் ஒன்றை ரணில் விக்ரமசிங்க முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த தேர்தல் இடம்பெறுகிறது.
இந்நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டால், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அந்த வேலைத்திட்டம் நின்றுவிடும். அவ்வாறு இடம்பெற்றால், நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
அதனால் பொருளாதார இலக்கும் அதற்கான வேலைத்திட்டமும் அதனை செயற்படுத்துவதற்கான அனுவபமும் உள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பதா அல்லது எந்த அனுபவமும் பாெருளாதார வேலைத்திட்டமும் இல்லாத சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கும் வாக்களிப்பதா என்பதை மக்கள் 21ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும்.
மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது, ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்து, மக்களுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்டுத்திக்கொடுத்தமைக்கு நன்றிக்கடனாக மக்கள் சரியான தீர்மானம் எடுக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.
அத்துடன் இந்த தேர்தலில் சிலர் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கின்றனர். வங்குராேத்து அடைந்திருந்த நாடு தற்போதுதான் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து வாக்களித்தால், நாடு மீண்டும் பழைய நிலைக்கு செல்லும். நாட்டின் பொருளாதாரம் ஸ்திர நிலைக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
புதிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபன கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறந்த அணியை பார்த்து சிலர் வாக்களிக்க எதிர்பார்த்து இருக்கின்றனர். சிறத் அணி இருந்தால் மாத்திரம் போதாது. அதற்கு சிறந்த தலைவரும் இருக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சிறந்த அணி ஒன்று இருக்கிறது. ஆனால் அதன் தலைமைத்துவம், அந்த அணியில் இருக்கும் சிந்த பொருளாதார அறிவுடைய உறுப்பினர்களை ஒதுக்கிவிட்டு, புதிதாக அவருடன் இணைந்துகொண்டுள்ளவர்களிடமே ஆலாேசனைகளை பெற்று செயற்பட்டு வருகிறார். இவ்வாறான ஒரு அணி அதிகாரத்துக்கு வந்தால், அந்த அணி நிலைத்திருக்காது.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த அனைத்து தலைவர்களும் நாட்டை அபிவிருத்தி செய்ய பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள். அந்த வரிசையில், ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்து நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்து, வங்குராேத்து அடைந்திருந்தபோது, நாட்டை பொறுப்பேற்று, வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளார். கட்சியை பாதுகாத்து நாட்டை மீட்ட ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்ய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் முன்வர வேண்டும் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM