டிவோர்ஸ் பெர்பியூம்

Published By: Digital Desk 3

13 Sep, 2024 | 04:43 PM
image

துபாய் இளவரசி முஹம்மது பின் அல்மக்தூமின் ஷேக்கா மஹ்ரா புதிய வாசனை திரவியம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமி மகளான ஷேக்கா மஹ்ரா, துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஷேக் மனா பின் முகமது என்பவரை திருமணம் செய்தார்.

இருவருக்கும் அழகான குழந்தை பிறந்த நிலையில், ஓராண்டுக்குள் இருவரது திருமண உறவு முடிவுக்கு வந்தது. இன்ஸ்டாகிராமில் தனது விவாகரத்து குறித்து பேசிய அவர், அன்பிற்குரிய கணவரே, நீங்கள் பிறருடன் நேரம் செலவிட்டு வருவதால் நான் விவகாரத்தை அறிவிக்கிறேன். இப்படிக்கு முன்னாள் மனைவி என கூறி, அதிரடி காட்டியிருந்தார். 

இளவரசி விவகாரத்தை அறிவித்து 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், டிவோர்ஸ்  என பெயரிட்டு வாசனை திரவியம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்