வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தபால் நிலையத்தை நாடவும் - தபால் திணைக்களம் !

14 Sep, 2024 | 09:35 AM
image

 (இராஜதுரை ஹஷான்) 

ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர் அட்டை விநியோக  பணிகள் இன்றுடன் நிறைவடையும். வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தி வாக்குச்சீட்டினை பெற்றுக் கொள்ள முடியும் என தபால் திணைக்களத்தின் பிரதி தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். 

தபால் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (13)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

தபால்மூல வாக்காளர் அட்டைகளில் 96 சதவீதமானவை பாதுகாப்பான முறையில்  மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுதியை இவ்விரு நாட்களுக்குள் ஒப்படைப்போம். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்களை விநியோகித்தல் 84 சதவீதம் நிறைவடைந்துள்ளன.  வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் (14) நிறைவடையும். கடந்த 3 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றன.  

இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்க பெறாதவர்கள் தமது வசிப்பிட பிரதேசத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று தமது விபரங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர் வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஆவணங்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   

எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54
news-image

வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள்,...

2025-02-18 12:35:39
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 12:33:25
news-image

துபாய்க்கு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்...

2025-02-18 12:26:59
news-image

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச்...

2025-02-18 13:08:22
news-image

பாண் விலை குறைப்பு

2025-02-18 12:01:20