ஹொரணையில் 3 கோடி ரூபா பெறுமதியான அம்பர் தொகையுடன் ஒருவர் கைது

13 Sep, 2024 | 02:54 PM
image

ஹொரணை ஹொரகெட்டிய பிரதேசத்தில் 05 கிலோ 620 கிராம் அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) தொகையுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் இந்த அம்பர் தொகையை ஒரு கிலோ தலா 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யவுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து இந்த அம்பர் தொகையைக் கொள்வனவு செய்யும் போர்வையில் ஹொரணை ஹொரகெட்டிய பிரதேசத்திற்குச் சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட அம்பர் தொகையின் மொத்த பெறுமதி 03 கோடி ரூபா ஆகும்.

இந்த அம்பர் தொகையானது திருகோணமலை பிரதேசத்தில் உள்ள நபரொருவரிடமிருந்து கிடைத்துள்ளதாக சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13