இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று மக்கள் விருப்பத்துடன் புதிய அரசாங்கம் அமையப்பெற்ற பின்னர் தனது திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்கு தயார் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டங்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளன எனினும் இலங்கை தனது பொருளாதார நெருக்;கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்காக இந்த முன்னேற்றத்தை பாதுகாப்பது அவசியம் என சர்வதேச நாணயநிதியத்தின் தகவல் தொடர்புதுறை இயக்குநர் ஜூலி கோசெக் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளபடி ஈஎவ்எவ் திட்டம் தொடர்பான கடன்பேண்தகுதன்மை மதிப்பீட்டை மீள்பரிசீலனை செய்ய அல்லது மீளாய்வு செய்ய முடியுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்கால தேர்தலை பொறுத்தவரை அதனை இலங்கை மக்களே தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சர்வதேச நாணயநிதியத்தின் பார்வையிலிருந்து பார்க்கும் போது இந்த திட்டம் குறிப்பிடத்தக்க விடயங்களை சாதித்துள்ளதாக கருதுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நாடு நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு இந்த திட்டத்தை பாதுகாப்பது அவசியம்,என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது போல தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் மூன்றாவது மறுஆய்வு குறித்து பேசுவோம்,எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் தெரிவை அடிப்படையான முடிவின் பின்னர் நாங்கள் அதனுடன் இணைந்து செல்ல தயாராக உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM