இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கத்திற்கு (JALTAS) ஜப்பான் தூதுவர் H. E. MIZUKOSHI Hideaki நேற்று (12) பாராட்டு விழா நடத்தினார்.
இலங்கையில் ஜப்பானிய மொழிக் கல்வியை மேம்படுத்துவதற்கும், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கும் இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கம் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இந்த விழா நடைபெற்றுள்ளது.
இலங்கையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஜப்பான் தூதரகத்தின் 'The Ballroom' இல் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
2004 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கமானது 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையில் ஜப்பானிய மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சங்கம் முக்கிய பங்காற்றியுள்ளது.
இதன்போது, கருத்து தெரிவித்த இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் H. E. MIZUKOSHI Hideaki, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மேம்படுத்துவதில் இலங்கை ஜப்பானிய மொழி ஆசிரியர் சங்கம் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM