மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரிய காதலன் தொடர்பில் பொலிஸார் விசாரணை

13 Sep, 2024 | 11:48 AM
image

மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி கப்பம் கோரியதாக கூறப்படும் காதலன் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் சந்தேக நபரான காதலனுடன்  பல மாத காலமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சந்தேக நபர் இந்த மாணவியுடனான காதல் உறவை திடீரென முறித்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபரான காதலன் இந்த மாணவியின் ஆபாச புகைப்படங்களை பயன்படுத்தி மாணவியை அச்சுறுத்தி 34,500 ரூபா பணத்தை பெற்றுள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் தனக்கு மேலும் 30,000 ரூபா பணம் தேவைப்படுவதாக இந்த மாணவியிடம் கூறியுள்ளார்.

பின்னர், இந்த மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளதோடு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபரான காதலன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05