யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் "இளங்கலை ஆய்வு மாநாடு - undergraduate research symposium வெள்ளிக்கிழமை (13) ஆரம்பமாகிறது.
"நாளைய முதலீடு - வளர்ந்துவரும் நிதித்துறைப் போக்குகளை ஆராய்தல்" என்ற தொனிப்பொருளுடன் சீ.எஃப்.ஏ ஶ்ரீலங்காவின் அனுசரணையுடன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் நிதி முகாமைத்துவத் துறை இந்த ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட கேட்போர் கூடத்தில் நிதித்துறைப் பேராசிரியர் ரதிராணி யோகேந்திரராஜா தலைமையில் இடம்பெறும் இந்த ஆய்வு மாநாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன், சீ.எஃப்.ஏ ஶ்ரீலங்கா குழுமத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான நுவான் ஜெயவர்த்தன ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றவுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் நிதியியல் பேராசிரியர் சாந்தரூபி புவனேந்திரா மற்றும் சீ.எஃப்.ஏ ஶ்ரீலங்கா குழுமத் தலைவர் அருண பெரேரா ஆகியோர் முதன்மை உரைகளை வழங்கவுள்ளதுடன், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் சிறப்புத் தேர்ச்சிக்கான வழிகாட்டல் அமர்வும் இடம்பெறவுள்ளது.
இந்த ஆய்வு மாநாட்டில் உள்ளூர், வெளியூரைச் சேர்ந்த 44 இளங்கலை மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன என்று நிதி முகாமைத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் எல். கெங்காதரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM