(எம்.ஆர்.எம்.வசீம்)
உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் இடம்பெற்றுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு புதிய லிபரல்வாத பொருளாதார கொள்கையே காரணமாகும் என சிறிலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வைத்தியர் டீ. வீரசிங்க தெரிவித்தார்.
சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஆதரவளித்து சிறிலங்கா கம்யூனிஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டம் வியாழக்கிழமை (12) கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எமது உட்பட உலகில் அதிகமான நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. அதேபோன்று உலக நாடுகளில் இடம்பெற்றுவரும் மோதல்கள் மற்றும் நாடுகளுக்கிடையிலான முறுகல் நிலைமைக்கு புதிய லிபரால்வாத கொள்கையே அடிப்படை காரணமாகும். இஸ்ரேல். பலஸ்தீன் மோதலும் இந்த புதிய லிபரல்வாத பொருளாதார கொள்கையின் வெளிப்பாடாகும்.
அத்துடன் எமது நாட்டு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீ்ள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. ஆனால் நாணய நிதியம் கடன் உதவி வழங்கும்போது எமது நாட்டின் முக்கிய வளங்களை இலக்குவைத்தே கடன் உதவி வழங்குகிறது. இதனால் எதிர்காலத்தில் எமது நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் அபாயம் இருக்கிறது. நாணய நிதியம் இவ்வாறான நிபந்தனையுடனே கடன் வழங்க இணக்கம் தெரிவிக்கிறது.
நாயண நிதியத்தின் இந்த உடன்படிக்கைக்கு ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்திருக்கிறார். அதேபோன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் அரசாங்கம் நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள நிபந்தனையை அவ்வாறே முன்னெடுத்துச் செய்வதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, இந்த நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதில்லை என்ற உறுதியை வழங்கி இருக்கிறார்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரண தொழிலாளர்களாகும். வரி வகைகள் அதிகரிக்கப்படுவதால் சாதாரண மக்களுக்கு தங்களின் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. அதேபோன்று சேவைக்கட்டணங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படும்போது தொழிற்சாலைகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
அதனால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சோசலிச பொருளாதார கொள்கையே தீர்வாகும். சோசலிச பொருளாதார கொள்கையின் அடிப்படையில் பொருளாார பிரச்சினைக்கு தீர்வுகாண சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவர்த்தன அதற்கான வேலைத்திட்டங்களை அமைத்துள்ளார். அதனாலே இந்த தேர்தலில் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி திலித் ஜயவீரவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM