எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி எதிர்வரும் 16 ஆம் திகதி தேர்தல் குழு கூடி ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்கும் எனவும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப.சத்தியலிங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது தொடர்பான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
வவுனியாவில் கூடிய தேர்தல் தொடர்பான குழுவின் கூட்டத்தில் கட்சியின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைக் காலதாமதமின்றி நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குகள் குறித்தும் அவருடன் கலந்துரையாடித் தீர்மானிப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் கூடும் தேர்தல் குழு இவ்விடயங்கள் தொடர்பில் முன்னேற்ற மீளாய்வைச் செய்து, அதுபற்றி மக்களுக்கு அறிவிக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM