மீதொட்டமுல்ல குறித்த ஜப்பானிய நிபுணர்களின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Published By: Priyatharshan

24 Apr, 2017 | 04:17 PM
image

மீதொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பான ஜப்பானிய நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீதொட்டமுல்ல குப்பைமேட்டு அனர்த்தத்துக்கு காரணமான விடயங்கள் மற்றும் இனிவரும் காலங்களில் அவ்வாறான சம்பவம் ஏற்படுவதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விதந்துரைப்பதற்காக வருகைதந்த ஜப்பானிய நிபுணர்கள் குழுவின் அறிக்கை இவ்வாறு கையளிக்கப்ட்டுள்ளது.

பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி தமது விதந்துரைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். 

குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கான குறுங்கால நடவடிக்கையாக குப்பைமேட்டின் அடித்தளத்தை பலப்படுத்தி பொலித்தீனால் மூடுதல் மற்றும் அடுத்த மழை காலத்துக்கு முன்னதாக குப்பை மேட்டின் அமைப்பை மலைபோன்ற வடிவத்திற்கு மாற்றி ஈர்ப்புச் சக்திக்கமைய உருவாக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டது.

குப்பைமேட்டின் அளவை படிப்படியாக குறைத்து மீள்சுழற்சி, மின்சக்தி உற்பத்தி மற்றும் இயற்கை உர உற்பத்திக்காகவும் பயன்படுத்துவது நீண்டகால விதந்துரையாக முன்வைக்கப்பட்டது.

இந்த அனர்த்தம் ஏற்பட்டு மிகவும் குறுகிய காலத்தினுள் நாட்டுக்கு வருகைதந்து விரிவான ஆய்யை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தமைக்காக நிபுணர்கள் குழுவிற்கும், ஜப்பானிய அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

1960 ஆம் ஆண்டில் ஜப்பானிய மக்களும் குப்பை தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜப்பானிடமிருக்கும் சிறந்த அனுபவங்கள் இலங்கைக்கு முக்கியமானவையாகுமென அங்கு கருத்துத் தெரிவித்த ஜப்பானியப் பிரதிநிதிகளின் தலைவர் குறிப்பிட்டார்.

மனித பேரவலமான மீதொட்டமுல்ல சம்பவம் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் கழிவுப்பொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜப்பானிய தூதுவர் கெனெச்சி சுகுநோவா உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவின் விடயத்தில் முழுமையான கரிசனை...

2023-10-02 21:06:06
news-image

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல ;...

2023-10-02 17:18:39
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மிகுதியாகவுள்ள தொழிற்றுறை...

2023-10-02 17:19:39
news-image

வீட்டில் தனி‍த்திருந்த வயோதிபப் பெண்ணின் கழுத்தை...

2023-10-02 17:40:49
news-image

மன்னாரில் அம்பியூலன்ஸ் வண்டியில் கடத்தப்பட்ட போதைப்பொருள்...

2023-10-02 17:42:27
news-image

ஒக்டோபர் மாத இறுதிக்குள் இலங்கையின் கடன்...

2023-10-02 17:17:26
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகளின் தாமதத்தால் 6...

2023-10-02 17:14:34
news-image

கோத்தாபாய அருகில் அமர்வதை தவிர்த்த சந்திரிகா...

2023-10-02 17:15:02
news-image

சீரற்ற வானிலை காரணமாக வைரஸ் பரவல்...

2023-10-02 16:59:56
news-image

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

2023-10-02 16:37:44
news-image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம்- இலங்கை மனிதஉரிமை...

2023-10-02 16:32:56
news-image

அமெரிக்கா தூதுவர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார்

2023-10-02 16:38:53