காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதியை கண்டுபிடிக்க விசேட சோதனை

12 Sep, 2024 | 07:56 PM
image

காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை கண்டுபிடிக்க பாணந்துறை பதுவில பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த முச்சக்கரவண்டி சாரதி கடந்த 40 நாட்களாக காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இறுதியாக பெண்ணொருவருடன் தனது முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “ பாணந்துறை சலிந்து ” என்பவருக்குச் சொந்தமான பொருள் ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் இந்த முச்சக்கரவண்டி சாரதியும் மற்றுமொரு நபரொருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டில் இனந்தெரியாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இதன்போது, மற்றைய நபர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் முச்சக்கரவண்டி சாரதி அந்த கும்பலிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் சாட்சியாக இருந்த முச்சக்கரவண்டி சாரதி கடந்த 40 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள நிலையில் அவரை கண்டுபிடிக்க விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களுக்கு வரிநிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது...

2024-10-03 21:47:02
news-image

கூரையில் இருந்து கீழே விழுந்து நபர்...

2024-10-03 21:10:24
news-image

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க...

2024-10-03 21:06:55
news-image

ஐ.நா. அமைப்பின் இணைப்பாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு 

2024-10-03 21:01:26
news-image

மன்னார் பேசாலை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட...

2024-10-03 20:55:05
news-image

குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம்...

2024-10-03 19:11:19
news-image

வாகன தொழில்நுட்பம் கற்கும் மாணவன் ஒருவன்...

2024-10-03 18:56:38
news-image

தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள்...

2024-10-03 18:31:43
news-image

சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு...

2024-10-03 17:59:59
news-image

கொழும்பில் 1,400 வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர்...

2024-10-03 17:39:43
news-image

சமூக - பொருளாதார அபிவிருத்தி மையத்தினால்...

2024-10-03 17:25:06
news-image

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு...

2024-10-03 17:26:36