எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் சசிகுமாரின் 'நந்தன்' திரைப்பட பாடல்

Published By: Digital Desk 2

12 Sep, 2024 | 04:50 PM
image

சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' மற்றும் 'கருடன்' என தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும்  ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சசி குமாரின் நடிப்பில் ஹாட்ரிக் வெற்றியை பெரும் என்ற எதிர்பார்ப்புடன் வெளியாகும் திரைப்படம் 'நந்தன்'. 

ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ' எக்கி எக்கி பாக்குறேன்..' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நந்தன்' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சுருதி பெரியசாமி, மாதேஷ், இயக்குநரும் , நடிகருமான பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி,  ஜி. எம். குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 ஆர். பி. சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். 

இந்த திரைப்படத்தை இரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் இயக்குநர் இரா. சரவணன் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'எக்கி எக்கி பாக்குறேனே பூனை போல...' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

 இந்த பாடலை பாடலாசிரியர் இரவி எழுத, பின்னணி பாடகர் நமீதா பாபு பாடியிருக்கிறார். 

 ஒரு ஆண் மீதான பெண்ணின் காதலை மெல்லிசையும், கண்ணியமிக்க வரிகளுடனும் கலந்து உருவாகி இருக்கும் இந்தப் பாடல் இளைய தலைமுறை ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிங்கம் புலி நடித்திருக்கும் 'செருப்புகள் ஜாக்கிரதை'...

2025-03-15 17:02:23
news-image

விமல் நடிக்கும் 'ஓம் காளி ஜெய்...

2025-03-15 17:01:59
news-image

புதுமுகங்கள் நடித்த 'மர்மர்' திரைப்படத்திற்கு படமாளிகை...

2025-03-15 16:57:56
news-image

விமல் நடிக்கும் 'பரமசிவன் ஃபாத்திமா' படத்தின்...

2025-03-15 16:56:46
news-image

ஸ்வீட் ஹார்ட் - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:57:00
news-image

பெருசு - திரைப்பட விமர்சனம்

2025-03-15 16:47:48
news-image

ராபர் - திரை விமர்சனம்

2025-03-14 18:26:12
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-14 17:41:17
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்திற்கும் நன்றி தெரிவித்த 'எமகாதகி'...

2025-03-13 18:32:12
news-image

இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட 'ட்ராமா'...

2025-03-13 18:31:45
news-image

விஜய் அண்டனி நடிக்கும் 'சக்தி திருமகன்'...

2025-03-13 18:25:30
news-image

நடிகை சௌந்தர்யா மரணத்தில் மோகன்பாபுவுக்கு தொடர்பா?...

2025-03-13 10:29:57