இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கேங்கர்ஸ்' எனும் புதிய படத்தில் வைகைப்புயல் வடிவேலு இணைந்திருக்கிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வையை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார்கள்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கேங்கர்ஸ்' எனும் திரைப்படத்தில் சுந்தர் சி, வடிவேலு , கேத்ரின் தெரசா, மைம் கோபி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி, அருள்தாஸ், முனிஸ்காந்த், விச்சு விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஈ. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார்.
நகைச்சுவை படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா லிமிடெட் சார்பில் ஏ சி எஸ் அருண்குமார் வழங்குகிறார்.
இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் வைகை புயல் வடிவேலுவின் வித்தியாசமான தோற்றமும் சுந்தர் சி யின் கர்ஜிக்கும் தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
அத்துடன் இந்த கூட்டணியில் உருவாகும் 'கேங்கர்ஸ்' படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM