எம்மில் பலரும் தற்போது வார இறுதியில் நடைபெறும் விருந்துகளில் பங்கு பற்றி அதிக அளவு மது அருந்துவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்கள்.
அதிகமாக மது அருந்தினால் அவர்களின் கல்லீரலில் பாதிப்பு ஏற்படும். அவை கல்லீரல் சுருக்க பாதிப்பாகவும் இருக்கலாம் அல்லது கல்லீரலில் கட்டி தோன்றலாம்.
இதுபோல் கட்டி தோன்றினால் வைத்திய நிபுணர்கள் அந்த கட்டியின் அளவை துல்லியமாக அவதானிக்க பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்வர்.
அத்துடன் மூன்று மாதம் அல்லது ஆறு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு முறை எம் ஆர் ஐ ஸ்கேன் அல்லது சி டி ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டு, அந்தக் கட்டியின் தன்மையை அவதானிக்க வேண்டும் என எடுத்துரைப்பர்.
கல்லீரலின் ஆரோக்கியம் நன்றாக இருந்து அங்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தாத கட்டியாக இருந்தால் அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
அதே தருணத்தில் அந்தக் கட்டி புற்றுநோய் கட்டியாக உரு மாற்றம் பெற்றிருந்தால் அதிலும் அந்த புற்றுநோய் கட்டி உடலின் வேறு பாகத்திலிருந்து கல்லீரலுக்குள் ஊடுருவாமல் கல்லீரலில் உள்ள செல்களே புற்றுநோய் செல்களாக மாற்றம் கொண்டிருந்தால், அதற்கான சிகிச்சை பிரத்யேகமானது மற்றும் ஒருங்கிணைந்தது என வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதிக அளவு மது அருந்துபவர்கள், கல்லீரலில் கொழுப்பு படித்திருப்பவர்கள் கல்லீரலின் தழும்பு அல்லது வடு பாதிப்பு ஏற்பட்டிருப்பவர்கள், ஹெபடைட்டீஸ் பி மற்றும் சி வைரஸ் தொற்று பாதிப்பு என பல்வேறு காரணங்களால் கல்லீரலில் புற்றுநோய் ஏற்படக்கூடும்.
இதனை மருத்துவ மொழியில் ஹெபடோசெல்லுலர் கார்சினோமா என்றும் குறிப்பிடுவதுண்டு.
இத்தகைய பாதிப்பு சிலருக்கு கல்லீரல் சுருக்க பாதிப்பு ஏற்பட்ட பிறகும் உருவாகலாம். சிலருக்கு கல்லீரல் சுருக்க பாதிப்பு இல்லாமலும் உருவாகலாம்.
இதனை பிரத்யேக பரிசோதனையின் மூலம் தான் வைத்திய நிபுணர்கள் உறுதிப்படுத்துவர்.
மேலும் இதன் போது குருதி பரிசோதனை, சிடி ஸ்கேன் மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, கல்லீரல் திசு பரிசோதனை ஆகியவற்றையும் மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.
பரிசோதனைகள் முடிவில் கல்லீரலின் ஆரோக்கியம் மற்றும் இயங்கு திறனை துல்லியமாக அவதானித்தும், அங்கு உண்டாகி இருக்கும் கட்டியின் அளவு மற்றும் வீரியம் குறித்து துல்லியமாக அவதானித்த பிறகும் வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்க இயலுமா? அல்லது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலுமா? என தீர்மானிப்பர்.
சிலருக்கு இந்த நோயின் பாதிப்பின் தீவிரத்தையும் மற்றும் நிலையையும் அவதானித்து புற்றுநோய் கட்டி மற்றும் அதன் அருகில் இருக்கும் கல்லீரலை பகுதியளவு அகற்றி நிவாரணம் தருவார்கள்.
சிலருக்கு மட்டுமே இத்தகைய கட்டியின் பின்னணியில் கல்லீரல் சுருக்க பாதிப்பும் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு சத்திர சிகிச்சை மட்டும் மேற்கொண்டு நிவாரணத்தை வழங்க இயலாது என அறிவுறுத்துவர்.
ஏனெனில் இத்தகைய பாதிப்பின் போது சத்திர சிகிச்சையை மேற்கொண்டு கல்லீரலின் பகுதி அளவு மற்றும் புற்றுநோய் கட்டியை அகற்றினால் மீண்டும் அங்கு புற்றுநோய் செல்கள் உருவாவதற்கான வாய்ப்பு உண்டு.
இதனால் இத்தகைய தருணங்களில் நோயாளிகளுக்கு கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மூலமாகத்தான் இதற்கு நிவாரணம் வழங்க இயலும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மேலும் கல்லீரலுக்கான புற்றுநோய் செல்களை அழிப்பதற்கு சத்திர சிகிச்சை , கதிர்வீச்சு சிகிச்சை, கீமோ தெரபி சிகிச்சை, டார்கெட்டட் டிரக் தெரபி , இம்யூனோ தெரபி போன்ற சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு நோயாளிகளுக்கு நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் வர்கீஸ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM